ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்.. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 April 2026

ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், தனது வேட்புமனுவை இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் தாக்கல் செய்தார்.


வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தம் கார்த்திகேயன், ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வருகை தந்து, தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் முறையாக தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.


வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வதாக தெரிவித்தார். மேலும், ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.


இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நிலைத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad